ஆண்டு 1581 (MDLXXXI) யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். கிரெகொரியின் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு.
நிகழ்வுகள்
- மார்ச் - கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கடுமையான தண்டம் விதிக்கும் சட்டத்தை இங்கிலாந்தின் நாடாளுமன்றம் கொண்டுவந்தது.
- மார்ச் 25 எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு போர்த்துகலின் முதலாம் பிலிப்பு மன்னனாக ஆட்சியில் அமர்ந்தார்.
- ஏப்ரல் 4 - உலகை சுற்றி வந்ததை அடுத்து பிரான்சிஸ் டிரேக் முதலாம் எலிசபெத் மகாராணியால் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
- சூலை 26 - வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- சூலை 26 - ரோமில் துரிங்கியா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.
- செப்டம்பர் - சுவீடனின் கூலிப் படை ஒன்று உருசியாவிடம் இருந்து (இன்றைய எசுத்தோனியாவில் உள்ள) நார்வா நகரைக் கைப்பற்றியது..
- டிசம்பர் 1 - இயேசு சபையைச் சேர்ந்த எட்மன்ட் காம்பியன் என்ற மதகுரு தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டார்.
- முதலாம் ராஜசிங்கன் இலங்கையின் சீதாவக்கை அரசின் மன்னனாக முடி சூடினான்.
பிறப்புகள்
- ஏப்ரல் 24 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு மதகுரு (இ. 1660)
இறப்புகள்
- செப்டம்பர் 1 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (பி. 1534)
- சூர்தாசர், சமயபரப்புநர் (பி. 1478)