factograf
TA

தென் அமெரிக்க நாடு

உருகுவை

உருகுவை

Key facts

மக்கள்தொகை34,44,263
பரப்பளவு1,76,215km²
வகைஇறைமையுள்ள நாடு, நாடு
நாடுஉருகுவை
தலைநகரம்மொண்டேவீடியோ
தொடக்கம்25 ஆகஸ்ட், 1825
நாட்டின் தலைவர்Yamandú Orsi
அரசின் தலைவர்Yamandú Orsi
கண்டம்தென் அமெரிக்கா
நேரவலயம்ஒ.ச.நே - 03:00
All data from the card 32
தலைநகரம்
மொண்டேவீடியோ34°53′S 56°10′W / 34.883°S 56.167°W
பெரிய நகர்
தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
எசுப்பானியம்உருகுவையின் சைகை மொழி
இனக் குழுகள் (2023)
86.0% வெள்ளையினம்10.4% கறுப்பர்6.3% பழங்குடிகள்0.7% கிழக்காசியர்6.3% ஏனையோர்
மக்கள்
உருகுவையர்
அரசாங்கம்
ஒற்றியாட்சி சனாதிபதி குடியரசு
• அரசுத்தலைவர்
யமுந்தூ ஓர்சி
சட்டமன்றம்
பொதுச் சபை
• மேலவை
மேலவை
• கீழவை
பிரதிநிதிகள் சபை
• அறிவிப்பு
25 ஆகத்து 1825
• அங்கீகாரம்
27 ஆகத்து 1828
• நடப்பு அரசியலமைப்பு
15 பெப்ரவரி 1967
• மொத்தம்
176,215 km2 (68,037 sq mi) (89-ஆவது)
• நீர் (%)
1.5
• 2023 கணக்கெடுப்பு
3,499,451 (132-ஆவது)
• அடர்த்தி
19.5/km2 (50.5/sq mi) (206-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)
2024 மதிப்பீடு
• மொத்தம்
$107.946 பில். (98-ஆவது)
• தலைவிகிதம்
$36,014 (59-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)
2024 மதிப்பீடு
• மொத்தம்
$82.605 பில். (77-ஆவது)
• தலைவிகிதம்
$23,088 (49-ஆவது)
ஜினி (2022)
40.6மத்திமம்
மமேசு (2023)
0.862அதியுயர் · 48-ஆவது
நாணயம்
உருகுவை பேசோ (UYU)
நேர வலயம்
ஒ.அ.நே−03:00 (உருகுவை நேரம்)
திகதி அமைப்பு
நா/மா/ஆ
வாகனம் செலுத்தல்
வலம்
அழைப்புக்குறி
+598
ஐ.எசு.ஓ 3166 குறியீடு
UY
இணையக் குறி
.uy

உருகுவை அல்லது உருகுவே (Uruguay, எசுப்பானியம்:; போர்த்துக்கீசம்: Uruguai, உருகுவாய்) அதிகாரபூர்வமாக உருகுவை கிழக்கத்தியக் குடியரசு ( Oriental Republic of Uruguay) என்பது தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளாக மேற்கு, தென்மேற்கில் அர்கெந்தீனா, வக்கு, வடகிழக்கில் பிரேசில், தெற்கில் ரியோ டி லா பிளாட்ட என்ற கயவாய், தென்கிழக்கில் அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியன அமைந்துள்ளன. இது தென்னமெரிக்காவின் தெற்கு கூம்பு பகுதியில் ஒன்றாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 176,215 சதுர கிமீ ஆகும். உருகுவையின் மக்கள்தொகை 3.5 மில்லியன், இவர்களில் 2 மில்லியன் மக்கள் அதன் தலைநகர் மொண்டேவீடியோவில் உள்ளனர். மொண்டெவீடியோ மிகப்பெரிய நகரமும் ஆகும்.

உருகுவேயாக மாறிய பகுதியில் முதன்முதலில் வேட்டைக்காரர்களின் குழுக்கள் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். 1516-ஆம் ஆண்டில் இப்பகுதியை அடைந்த முதல் ஐரோப்பிய நாடுகாண் பயணி யுவான் டியாசு டி சோலிசு ஆவார், ஆனால் அந்தப் பகுதி அதன் அண்டை நாடுகளை விட பின்னரேயே குடியேற்றமயப்படுத்தப்பட்டது. ஐரோப்பியர்கள் வந்த காலத்தில், குரானி, சனா போன்ற பிற குழுக்களுடன் சேர்ந்து சாருவா மக்களும் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினராக இருந்தனர். இருப்பினும், இந்த மக்களில் யாரும் சமூக ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பெரிய குழுக்களாக ஒழுங்கமைக்கப்படவில்லை, இது அவர்களின் வீழ்ச்சிக்குப் பங்களித்தது. பிராந்திய மோதல்களுக்கு மத்தியில், போர்த்துகீசியர் 1680-இல் சாக்கிரமெந்தோ குடியேற்றத்தை நிறுவினர், எசுப்பானியர் மொண்டேவீடியோவை ஒரு இராணுவக் கோட்டையாக நிறுவினர். போர்த்துகல், எசுப்பானியா, பின்னர் ரியோ டி லா பிளாட்டாவின் ஐக்கிய மாகாணங்கள், பிரேசில் பேரரசு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வழிப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1811-இற்கும் 1828-இற்கும் இடையில் உருகுவை அதன் சுதந்திரத்தைப் பெற்றது. 1830-ஆம் ஆண்டில், நாடு அதன் அரசியலமைப்பை இயற்றி, முறையாக ஒரு இறையாண்மையுடனான சுதந்திர நாடாக நிறுவப்பட்டது.

விடுதலைக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில், உருகுவை வெளிநாட்டு செல்வாக்கிற்கும் தலையீட்டிற்கும் உட்பட்டது, அதோடு தொடர்ச்சியான உள் மோதல்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகளும் இடம்பெற்றன. 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, நாடு, முக்கியமாக எசுப்பானியா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளில் இருந்து, குறிப்பிடத்தக்க ஐரோப்பியக் குடியேற்ற அலைகளைக் கண்டது. இது அதன் மக்கள்தொகையைப் பெரிதும் பாதித்தது, நவீன கால உருகுவையப் பண்பாடு மற்றும் சமூகத்திற்கு அடித்தளம் அமைத்தது. தேசிய அரசியலில் இரண்டு அரசியல் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின: கொலராடோ கட்சி, தேசியக் கட்சி ஆகியவை ஆகும். இவை 19-ஆம் நூற்றாண்டில் பல உள்நாட்டுப் போர்களில் மோதின. இவை கூட்டாக 'பாரம்பரியக் கட்சிகள்' என்று அழைக்கப்படுகின்றன. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், முன்னோடி பொருளாதார, தொழிலாளர் மற்றும் சமூக சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக ஒரு மேம்பட்ட நலன்புரி அரசின் அடித்தளம் அமைக்கப்பட்டது. நீடித்த அரசியல் திரத்தன்மையின் காலகட்டத்துடன் இணைந்து, இந்த முன்னேற்றங்கள் நாட்டிற்கு "அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து" என்ற நற்பெயரைப் பெற்றுத் தந்தது. 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் முற்பகுதியிலும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளும், தீவிர இடதுசாரி நகர்ப்புற கெரில்லாப் போருக்கு எதிரான போராட்டமும், அதன் உச்சக்கட்டமாக 1973-ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் முடிந்தது. இது 1985 வரை குடிமை-இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவியது. உருகுவை இன்று ஒரு சனநாயக அரசியலமைப்புக் குடியரசாக உள்ளது, சனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

மக்களாட்சி, அரசாங்க வெளிப்படைத்தன்மை, பொருளாதார சுதந்திரம், சமூக முன்னேற்றம், வருமான சமத்துவம், தனிநபர் வருமானம், புத்தாக்கம், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பன்னாட்டு அளவீடுகளில் உருகுவை ஓர் உயர்ந்த இடத்தில் உள்ளது. உருகுவை ஓர் உயர் வருமான பொருளாதாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, கஞ்சாவை முழுமையாக சட்டப்பூர்வமாக்கியுள்ளது—உலகில் அவ்வாறு செய்த முதல் நாடு—அத்துடன் ஒரே பாலின திருமணம், கருக்கலைப்பு, கருணைக்கொலை ஆகியவற்றையும் சட்டபூர்வமாக்கியுள்ளது. உருகுவே ஐக்கிய நாடுகள் அவை, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை ஆகியவற்றின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது.

வரலாறு

உருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' (river of the painted birds) என்று பொருள்.

16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' (Buenos Aires) வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கை' யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.

பழங்குடி இனமான 'சருவா' காலப்போக்கில் அழிந்துவருகிறது, ஏப்ரல் 11, 1831 அன்று சல்சிபுதிஸ்(Salsipuedes) என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். உருகுவையின் முதல் அதிபரான ஜெனரல் புரக்டோசா ரிவேரா(General Fructuoso Rivera) முன்னிலையில் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் சருவா இன மக்கள் உருகுவேயிலிருந்து வெளியேறினர். 1833-ஆம் ஆண்டு நான்கு சருவா இனத் தலைவர்கள் - செனாக்யு (Senaque), வைமெக்க பிரு (Vaimaca Piru), தகுபே (Tacuabe) மற்றும் அவர் மனைவி குய்னூசா (Guyunusa) ஆகியோர் பாரீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு கேளிக்கை அரங்கில் காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பராகுவேக்கு எதிரான போரில் உருகுவை பங்கெடுத்தது.

விளையாட்டுக்கள்

இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். பிரித்தானிய தீவுகளுக்கு வெளியே முதல் பன்னாட்டுப் போட்டி உருகுவே மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்கிடையே மான்டிவீடியோவில் 1902 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்றது. உருகுவே 1924 ஆம் ஆண்டில் பாரிசு ஒலிம்பிக் போட்டியிலும், மீண்டும் 1928 ஆம் ஆண்டு ஆம்சுடர்டாமிலும் தங்கம் வென்றது.

புற இணைப்புகள்

Read next

In 265 languages

taаԥсшәаAcèhAfrikaansAlemannischалтай тилአማርኛPangcaharagonésÆngliscOboloअंगिकाالعربيةالدارجةمصرىasturianuKotavaअवधीAymar aruazərbaycancaتۆرکجهбашҡортсаBasa BaliBoarischžemaitėškaBikol Centralбеларуская (тарашкевіца)беларускаяBetawiбългарскиभोजपुरीBislamaবাংলাབོད་ཡིགবিষ্ণুপ্রিয়া মণিপুরীbrezhonegbosanskiбуряадcatalàChavacano de Zamboanga閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄нохчийнCebuanoکوردیcorsuqırımtatarcačeštinaсловѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟчӑвашлаCymraegdanskdagbanliDeutschZazakidolnoserbskiडोटेलीދިވެހިބަސްཇོང་ཁeʋegbeΕλληνικάEnglishEsperantoespañoleestieuskaraestremeñuفارسیFulfuldesuomivõroNa Vosa VakavitiføroysktfrançaisarpetanNordfriiskfurlanFryskGaeilgeGagauzkriyòl gwiyannenGàidhliggalegoگیلکیAvañe'ẽगोंयची कोंकणी / Gõychi Konknni𐌲𐌿𐍄𐌹𐍃𐌺ગુજરાતીwayuunaikiGaelgHausa客家語 / Hak-kâ-ngîHawaiʻiעבריתहिन्दीFiji HindihrvatskihornjoserbsceKreyòl ayisyenmagyarհայերենԱրեւմտահայերէնinterlinguaBahasa IndonesiaInterlingueIgboIlokanoIdoíslenskamedžuslovjanskyitaliano日本語Patoisla .lojban.JawaქართულიQaraqalpaqshaTaqbaylitадыгэбзэKabɩyɛTyapKongoқазақшаಕನ್ನಡYerwa Kanuri한국어къарачай-малкъарکٲشُرkurdîкомиkernowekкыргызчаLatinaLadinoLëtzebuergeschлезгиLingua Franca NovaLugandaLimburgsLigureLadinlombardlingálaລາວlietuviųlatgaļulatviešuMadhurâमैथिलीBasa BanyumasanмокшеньMalagasyолык марийMāoriMinangkabauмакедонскиമലയാളംмонголꯃꯤꯇꯩ ꯂꯣꯟमराठीкырык марыBahasa MelayuMaltiMirandésမြန်မာဘာသာمازِرونیNapulitanoNedersaksiesPlattdüütschनेपालीनेपाल भाषाNederlandsnorsk nynorsknorskNovialoccitanlivvinkarjalaOromooଓଡ଼ିଆиронਪੰਜਾਬੀPangasinanKapampanganPapiamentuPicardDeitschpolskiPiemontèisپنجابیپښتوportuguêsRuna Simirumantschromani čhibikirundiromânăрусскийрусиньскыйIkinyarwandaसंस्कृतम्саха тылаsardusicilianuScotsسنڌيdavvisámegiellasrpskohrvatski / српскохрватскиတႆးසිංහලSimple EnglishslovenčinaslovenščinaGagana SamoaanarâškielâchiShonaSoomaaligashqipсрпски / srpskiSeelterskSundasvenskaKiswahiliślůnskiSakizayaTayalతెలుగుtetunтоҷикӣไทยትግርኛTürkmençeTagalogtolışilea faka-Tongatoki ponaTok PisinTürkçeSeediqXitsongaтатарча / tatarçachiTumbukaудмуртئۇيغۇرچە / Uyghurcheукраїнськаاردوoʻzbekcha / ўзбекчаvènetovepsän kel’Tiếng ViệtWest-VlamsVolapükwalonWinarayWolof吴语isiXhosaმარგალურიייִדישYorùbáVahcuenghZeêuwsⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ ⵜⴰⵏⴰⵡⴰⵢⵜ文言閩南語 / Bân-lâm-gí粵語中文

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article