1696 (MDCXCVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- சனவரி - இங்கிலாந்து நாடாளுமன்றம் புதுநாணயமாக்கல் சட்டத்தை நிறைவேற்றியது.
- சனவரி 29 - ஐந்தாம் இவான் இறந்ததை அடுத்து முதலாம் பீட்டர் உருசியாவின் முழுமையான சார் மன்னனாக முடிசூடினான்.
- பஞ்சம் பின்லாந்தின் மூன்றில் ஒரு மக்கள்தொகையையும், எசுத்தோனியாவின் ஐந்தில் ஒருவரையும் அழித்தது.
- யோசப் வாசு அடிகள் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார்.
பிறப்புகள்
- செப்டம்பர் 27 - அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1787)