1694 (MDCXCIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 5 - நன்னம்பிக்கை முனையில் இருந்து பட்டாவியா நோக்கிச் சென்ற ரிடர்சாப் வான் ஒலாந்து என்ற டச்சுக் கப்பல் கடலில் மூழ்கியது.
- மார்ச் 1 - எச்,எம்,எசு சசெக்சு என்ற 13 கப்பல்கள் கொண்ட தொகுதி ஒன்று ஜிப்ரால்ட்டர் அருகே மூழ்கியதில் 1,200 பேர் வரை உயிரிழந்தனர்.
- சூலை 3 - யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதி புளோரிசு புளொம் யாழ்ப்பாணத்தில் காலமானார். என்ட்றிக்கு சுவாடிக்குரூன் என்பவர் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.
- சூலை 27 - இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டது.
- செப்டம்பர் 5 - இங்கிலாந்து, வாரிக்கு நகரில் பெரும் தீ பரவியது.
- டிசம்பர் 3 - இங்கிலாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் இடம்பெற வகை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் 28 - இங்கிலாந்தின் இரண்டாம் மேரி அரசி பெரியம்மை நோயினால் தனது 32 வது அகவையில் வாரிசு எவருமின்றி காலமானார். இவரின் கணவர் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் தனியே ஆட்சி செய்தார்.
- அத்திலாந்திக் அடிமை வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஹனிபல் என்ற இங்கிலாந்து அடிமைக் கப்பல் பெனின் அருகே தனது பயணத்தை முடித்துக் கொண்டது. கப்பலில் இருந்த 692 அடிமைகளில் அரைவாசிப் பேர் கப்பலில் மாண்டனர்.
- யோசப் வாசு அடிகள் இலங்கையில் மாதோட்டம், பூநகரி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.
பிறப்புகள்

- சனவரி 3 - சிலுவையின் புனித பவுல், இத்தாலிய புனிதர் (இ. 1775)
- நவம்பர் 21 - வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778)
இறப்புகள்
- செப்டம்பர் 28 - காப்ரியல் மௌடன், பிரெஞ்சு கணிதவியலாளர் (பி. 1618)
- நவம்பர் 28 - மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644)
- நவம்பர் 29 - மார்செல்லோ மால்பிஜி, இத்தாலிய மருத்துவர் (பி. 1628)