1475 (MCDLXXV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 10 – மோல்தாவிய-உதுமானியப் போர்கள்: வாசுலி சமரில் மோல்தாவியாவின் மூன்றாம் இசுட்டீவன் இரண்டாம் முகமது தலைமையிலான உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தார்.
- சூலை 4 – பர்கண்டியப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு பிரான்சிற்கு எதிரான பர்கண்டி கோமகனுக்கு ஆதரவாக கலேயில் தரையிறங்கினார்.
- ஆகத்து 29 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடையே இடம்பெற்ற குறுகிய போர் முடிவுக்கு வந்தது.
- நவம்பர் 14 – பவாரியாவின் இளவரசர் ஜார்ஜிற்கும், இளவரசி எட்விக் ஜாகிலனுக்கும் இடையே பெரும் தெருக்கூத்து திருமணம் இடம்பெற்றது.
பிறப்புகள்
- மார்ச் 6 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய சிற்பி (இ. 1564)