1329 (MCCCXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- பெப்ரவரி 1 – பொகீமியாவின் மன்னர் ஜான் லித்துவேனியாவின் முக்கிய கோட்டையான மெத்வேகலிசைக் கைப்பற்றினார்.
- பெப்ரவரி 18 – எத்தியோப்பியப் பேரரசர் அம்தா முதலாம் செயோன் தெற்கு முஸ்லிம் மாகாணங்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தார்.
- ஏப்ரல் – எதிர்-திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாசு திருத்தந்தை இருபத்திரண்டாம் ஜானினால் மத நீக்கம் செய்யப்பட்டார்.
- சூன் 7 – இரண்டாம் டேவிட் இசுக்கொட்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
- சூன் 11 – பெலிக்கானன் சமரில் உதுமானியத் திருக்கியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.
- ஆகத்து 9 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.
இறப்புகள்
- சூன் 7 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்லாந்து மன்னர் (பி. 1274)
- ஆகத்து 30 – குதுக்து கான், யுவான், மங்கோலியப் பேரரசர் (பி. 1300)