factograf
TA

சமாரா

சமாரா

Key facts

மக்கள்தொகை11,54,223
பரப்பளவு541km²
வகைபெருநகரம்
நாடுஉருசியா
தொடக்கம்1586
கடல் மட்டத்தில் இருந்து ஏற்றம்100m
All data from the card 21
நாடு
உருசியா
ஒன்றிய அமைப்புகள்
சமாரா மாகாணம்
நிறுவிய ஆண்டு
1586
நகரம் status since
1688
• நிர்வாகம்
சமாரா நகரசபை
• முதல்வர்
எலேனா லப்பூச்கினா
• மொத்தம்
541.382 km2 (209.029 sq mi)
ஏற்றம்
100 m (300 ft)
• மொத்தம்
11,64,685
• மதிப்பீடு (2025)
11,54,223 (−0.9%)
• தரவரிசை
2010 இல் 6வது
• அடர்த்தி
2,200/km2 (5,600/sq mi)
• கீழ்ப்பட்டவை
city of oblast significance of Samara
• Capital of
சமாரா மாகாணம், வோல்சுக்கி மாவட்டம் even though it is not a part of it.
• நகர்ப்புற மாவட்டம்
சமாரா நகர வட்டம்
• Capital of
சமாரா நகர வட்டம், வோல்ஸ்கி மாநகர மாவட்டம்
நேர வலயம்
ஒசநே+4 (Samara Time )
அஞ்சல் குறியீடு(கள்)
443XXX
தொலைபேசிக் குறியீடு(கள்)
+7 846
OKTMO குறியீடு
36701000001
இணையதளம்
city.samara.ru

சமாரா (Samara, உருசியம்: Сама́ра), 1935 முதல் 1991 வரை குய்பீசெவ், Куйбышев), என்பது உருசியாவின் ஒரு நகரமும், சமாரா மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில் இது உருசியாவின் ஆறாவது பெரிய நகரம் ஆகும். இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கே வோல்கா மற்றும் சமாரா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இந்நகரின் மேற்கு எல்லையாக வோல்கா ஆறு உள்ளது. ஆற்றின் அடுத்த கரையில் சிகூலி மலைகள் உள்ளன. வடக்கு எல்லையில் சோக்கோலி மலைகளும், தெற்கு மற்றும் கிழக்கே தெப்புவெளிகளும் காணப்படுகின்றன. நகரின் நிலப்பரப்பு 46,597 எக்டேர்கள் ஆகும். மக்கள்தொகை: 1,164,685 (2010).

சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியில் சமாரா ஒரு மூடிய நகராக இருந்தது. தற்போது இது ஐரோப்பிய உருசியாவின் ஒரு முக்கிய அரசியல், வணிக, தொழிற்துறை, கலாசார மையமாக உள்ளது. 2007 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய—உருசிய உச்சி மாநாடு இங்கு நடைபெற்றது. இந்நகரம் கோடை காலத்தில் மிகவும் வெப்பமாகவும், குளிர் காலத்தில் மிகவும் குளிரான காலநிலையும் நிலவுகின்றன.

சமாரா 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்த்தத் தெரிவான உருசியாவின் 11 நகரங்களில் ஒன்றாகும். இங்கு நான்கு குழுநிலை ஆட்டங்களும், ஒரு 16-சுற்று ஆட்டமும், ஒரு காலிறுதி ஆட்டமும் நடைபெறவிருக்கின்றன. அனைத்து ஆட்டங்களும் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட கொசுமசு அரங்கில் நடைபெறும்.

சோவியத் காலம்

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1941 இல் சமாரா (அன்றைய பெயர் குய்பீசெவ்) சோவியத் ஒன்றியத்தின் தற்காலிக தலைநகராக இருந்தது. உருசியாவை முற்றுகையிட்ட செருமனி மாஸ்கோவைக் கைப்பற்றும் பட்சத்தில், இந்நகரம் மாஸ்கோவிற்கு மாற்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1943 ஆம் ஆண்டில் தலைநகர் மீண்டும் மாஸ்கோவிகு மாற்றப்பட்டது.

போரின் ஆரம்ப காலம் முதல் இங்கு போருக்குத் தேவையான இராணுவ வானூர்திகள், சுடுகலன்கள், படைத்தளவாடங்கள் இங்கு தயாரிக்கப்பட்டன. சமராவின் குடிமக்கள் பலரும் போரில் பங்கு கொண்டனர்.

போருக்குப் பின்னர் பாதுகாப்புத் தொழிற்துறை இங்கு வளர்த்தெடுக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதனால் இது ஒரு மூடிய நகராக ஆக்கப்பட்டது. 1960 இல், நாட்டின் ஏவுகணை பாதுகாப்பு மையமாக ஆக்கப்பட்டிருந்தது. உலகின் முதலாவது மனிதரை விண்ணுக்குக் கொண்டு சென்ற விண்கலத்தை ஏவிய வஸ்தோக் என்ற ஏவுகலம் இங்கேயே தயாரிக்கப்பட்டது. 1961 ஏப்ரல் 12 இல் விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதர் யூரி ககாரின் பூமிக்குத் திரும்பிய போது இங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தார்.

வெளி இணைப்புகள்

Read next

In 124 languages

taAfrikaansалтай тилአማርኛالعربيةمصرىasturianuKotavaazərbaycancaتۆرکجهбашҡортсаBasa Baliбеларуская (тарашкевіца)беларускаябългарскиবাংলাbrezhonegbosanskiбуряадcatalàнохчийнCebuanoکوردیqırımtatarcačeštinaсловѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟчӑвашлаCymraegdanskDeutschΕλληνικάEnglishEsperantoespañoleestieuskaraفارسیsuomiNa Vosa VakavitiføroysktfrançaisNordfriiskFryskGaeilgegalegoHausa客家語 / Hak-kâ-ngîעבריתहिन्दीhrvatskihornjoserbscemagyarհայերենԱրեւմտահայերէնBahasa IndonesiaInterlingueIdoíslenskaitaliano日本語ქართულიқазақша한국어перем комикомикыргызчаLatinaLimburgsLadinlietuviųlatviešuMalagasyолык марийMāoriмакедонскимонголमराठीမြန်မာဘာသာэрзяньمازِرونیNederlandsnorsk nynorsknorskoccitanиронpolskiپنجابیپښتوportuguêsRuna Simiromânăрусскийсаха тылаScotssrpskohrvatski / српскохрватскиSimple Englishslovenčinaslovenščinaanarâškielâсрпски / srpskisvenskaKiswahiliślůnskiтоҷикӣไทยTagalogtolışiTürkçeтатарча / tatarçachiTumbukaTwiудмуртукраїнськаاردوoʻzbekcha / ўзбекчаvepsän kel’Tiếng ViệtVolapükWinaray吴语მარგალური閩南語 / Bân-lâm-gí粵語中文

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article