factograf
TA

ஆக்சின்

ஆக்சின்

ஆக்சின்கள் (Auxins) தாவர வளரூக்கிகளில் ஒரு வகை. இவை செடிகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. ஆக்சின்கள் பற்றி முன்மொழிந்தவர் டச்சு அறிவியலாளர் ஃபிரிட்ஸ் வென்ட் என்வர். ஆக்சினின் வேதியியல் பண்பை ஆராய்ந்து அவை இன்டோல்-3-அசிட்டிக் அமிலம் தான் என்று கென்னத். வி. திமேன் கூறினார்.

ஆக்சின்கள் தாவர செல்களில் உள்ள குறிப்பிட்ட ஜீன்களைத் தூண்டி தாவர வளர்ச்சிக்கான புரத உற்பத்தியைத் தூண்டுகின்றன. இளநீரில் ஆக்சின்கள் உட்பட பல செடி வளரூக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read next

In 56 languages

Text from Wikipedia, CC BY-SA 4.0 · Source article